• Download mobile app
10 May 2024, FridayEdition - 3012
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி திட்டங்களை இரண்டு மடங்கு வேகத்தில் செயல்படுத்துவோம் – வானதி ஸ்ரீனிவாசன்

April 4, 2019 தண்டோரா குழு

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி திட்டங்களை இரண்டு மடங்கு வேகத்தில் செயல்படுத்துவோம் என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவை கொடிசியா மைதானத்தில் வருகின்ற 8 ம் தேதி மாலை 7 மணிக்கு பிரதமர் மோடி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நிலகீரி, பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்ய உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

5 இலட்சம் பேர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கொங்கு மண்டலத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள். மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வளர்ச்சி திட்டங்களை இரண்டு மடங்கு வேகத்தில் செயல்படுத்துவோம். ஜிஎஸ்டியை குறை கூறும் காங்கிரஸ் கட்சி, இந்த வரியை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய பாஜக அரசு ஜிஎஸ்டியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் கூறிய அவர், நீட் தேர்வு, ஜிஎஸ்டிக்கும் காங்கிரஸ்க்கு தொடர்பில்லை என்ற மாயையை உருவாக்க முயற்சிக்கிறது. ஜிஎஸ்டியினால் நாடு பின்னடைவை சந்தித்தது உண்மை தான். மக்கள் உணர்வை புரிந்து மிக குறைந்த காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரியை குறைத்துள்ளோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்திற்கு ஒரு பிரதமர், கேரளத்திற்கு ஒரு பிரதமர் என சொல்லி வருகிறது. பிரதமர் யார் என்பதில் எதிர்கட்சிகளிடம் ஒருமித்த கருத்து இல்லை. வயநாட்டில் ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூட ஆதரவு அளிக்கவில்லை என தெரிவித்தார்.

தோல்வி உறுதியாகி கொண்டிருப்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். தேர்தலுக்கு பிறகு நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்வோம். மத அடிப்படைவாதிகளால் இந்து பிரமுகர்கள் படுகொலை செய்யப்படுவதை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன் எனவும், இந்த விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன் எனவும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க