• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்ற கேத்ரினா கிரே !

December 17, 2018 தண்டோரா குழு

67 வது மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேத்ரினா கிரே பட்டதை வென்றுள்ளார்.

தாய்லாந்து நாட்டில் 67 வது பிரபஞ்ச அழகி பட்டத்துக்கான அலங்கார அணிவகுப்புப் போட்டி இன்று நடந்து முடிந்தது. இதற்கு முன் எப்போதும் இல்லாதவகையில் 94 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கேத்ரினா எலிஸா கிரே 2018 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிலிப்பைஸில் உள்ள ஆல்பே மாகாணம் ஓஸ் நகரத்தில் பிறந்த கேத்ரினா இசைக் கல்லூரியில் முறையாக இசை பயின்றுள்ளார். இவரது தந்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் தாய் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர். மிஸ் யுனிவர்சாக வெற்றி பெற்றவர்களுக்கு மிஸ் யுனிவர்ஸ் ஆர்கனைசில் ஒரு வருட ஒப்பந்தத்தை வழங்குவார்கள். அதில் நோய்கள், சமாதானம் மற்றும் எய்ட்ஸ் பற்றிய பொது விழிப்புணர்வை பரப்புவதற்காக உலகம் முழுவதும் சுற்றவுள்ளார் அழகி கேத்ரினா கிரே.

மேலும் இவர் தற்காப்புக்கலையில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். இவர், 2016 மிஸ் வேர்ல்டு பிலிபைன்ஸ் பட்டம் வென்றுள்ளார் குறிபிடத்தக்கது

மேலும் படிக்க