June 20, 2018
தண்டோரா குழு
சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரித்தி வாஸ்‘மிஸ் இந்தியா-2018’ பட்டத்தை வென்றுள்ளார்.
2018 ம் ஆண்டிற்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடைப்பெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றனர்.இந்நிலையில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ., பிரெஞ்ச் படித்து வரும்,கல்லுாரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றார். ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்ரி,ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.முன்னதாக ’மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை அனு க்ரீத்தி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.