November 3, 2017
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அருகே வங்கக்கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் பலத்த மழை பெய்யும்.குறிப்பாக வடகடலோர மாவட்டங்களிலும் இதன் தாக்கும் இருக்கும்.
மேலும்,உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கன மழை பதிவாகியுள்ளது.