• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிரட்டல் காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமானம் தரையிறக்கம்

October 30, 2017 தண்டோராகுழு

மும்பை நகருக்கு பயணம் செய்த ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அகமதாபாத் விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

மும்பை விமானநிலையத்திலிருந்து புதுதில்லி விமானநிலையத்திற்கு பயணம் செய்ய வேண்டிய போயிங் 737 விமான, இன்று(அக்டோபர் 3௦) அதிகாலை சுமார் 2.55 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில், விமான கழிவறையில், உருது மற்றும் ஆங்கிலத்தில் ‘விமானத்தில்12 கடத்தல்காரர்கள் இருக்கின்றனர் என்றும், விமானத்தின் கார்கோ பகுதியில் வெடிகுண்டுகள் இருக்கிறது என்றும், விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீர் பகுதிக்கு விமானத்தை ஒட்டி செல்ல வேண்டும் என்று எழுதப்பட்டிருந்த மிரட்டல் கடிதம் ஒன்றை விமான ஊழியர் ஒருவர் கண்டுபிடித்தார்.

உடனே அது குறித்து விமான ஓட்டுநருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, அந்த விமானம்,அகமதாபாத் விமானநிலையத்தில்காலை 3.48 மணிக்கு தரையிறக்கப்பட்டது.

ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் ஓட்டுநர் மிரட்டல் கடிதம் குறித்தும் ஏற்கனவே அஹமதாபாத் விமானநிலையத்தின் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தந்ததினால், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் அங்கே தயாராக நின்றுக்கொண்டிருந்தனர். காலை 3.48 மணியளவில் அகமதாபாத் விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.அதிலிருந்த 115 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் விமானத்திலிருந்து கீழே இறப்பட்டனர்.

பின்னர், விமானத்தை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள்முழுமையான சோதனைகளைமேற்கொண்டனர். இதையடுத்து விமானத்தில்வெடிகுண்டு ஒன்றும் இல்லை என்று உறுதி செய்த பிறகு, காலை சுமார் 6.40 மணியளவில் அந்த விமானம் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது என்று விமானநிலையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க