• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மின்னணு இயந்திரவாக்கு எண்ணிக்கை பணி முடிந்த பின் ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும் – சத்ய பிரசாத் சாஹூ

May 21, 2019 தண்டோரா குழு

மின்னணு இயந்திரவாக்கு எண்ணிக்கை பணி முடிந்த பின் ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற 2019 மக்களவை தேர்தல் தேர்தல் மே 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுயை தவிர மற்ற 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 ஆம் நாள் நடைப்பெற்றது. அன்றைய தினமே 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. மேலும், மே 19 ஆம் தேதி 7ம் கட்ட தேர்தலின்
போது மீதமுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது.

நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்பை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (மே 23) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இதற்கிடையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரசாத் சாஹூ வாக்கு எண்ணிக்கை குறித்து பேசும்போது,

மே 23 ஆம் தேதி காலை 8மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி முதலில் தொடங்கும் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 30நிமிடத்திற்கு பின் மின்னணு
இயந்திரவாக்கு எண்ணிக்கை தொடங்கும். மின்னணு இயந்திரவாக்கு எண்ணிக்கை பணி முடிந்த பின் ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க