• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிகவும் ஆபத்தான நிலையில் எஸ்.பி.பி. – மருத்துவமனைக்கு குடும்பத்தினர் வருகை

September 25, 2020 தண்டோரா குழு

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியமுக்கு கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.எஸ்பிபி உடல்நிலை மோசம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று நீங்கியதாக கடந்த 7ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,நேற்று மாலை முதல் எஸ்.பி.பி.யின் உடல்நிலை, மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன் நேற்று எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சென்று எஸ்பிபி உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார்.மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள எஸ்.பி.பி.க்கு எக்மோ, உயிர் காக்கும் பிற கருவிகளுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,தற்போது சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் வந்துள்ளனர்.
இதனிடையே, எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ வல்லுனர்களுடன் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் ஆலோசனை மேற்கொண்டார். இதனால் மருத்துவமனையில்கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க