• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாவோயிஸ்ட் பெயரில் நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

April 25, 2017 தண்டோரா குழு

மாவோயிஸ்ட் பெயரில் நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடிதம் எழுதிய முன்னாள் ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில்வே அதிகாரிகளுக்கு 9 செல்போன் எண்களை குறிப்பிட்டு மாவோயிஸ்ட் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் இன்று அனுப்பப்பட்டுள்ளது.

மாவோயிஸ்ட் பெயரில் மிரட்டல் விடுக்கப்பட்ட அக்கடிதத்தில், அரக்கோணம் அருகே நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், மேல்மருவத்தூர் அருகே முத்துநகர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், அந்த கடிதத்தில் சில தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதையடுத்து ரயில் நிலைய மேலாளர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மிரட்டல் உண்மையா? யாரையாவது சிக்க வைப்பதற்கான மிரட்டலா என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து மிரட்டல் கடிதம் எழுதிய முன்னாள் ரயில்வே ஊழியர் கங்காதரனை, அரக்கோணத்தில் போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க