July 30, 2020
தண்டோரா குழு
கோவையில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளர்,தேவேந்திர குலத்தான், உள்ளிட்ட 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தங்களது சமூகத்தின் பெயரை, ‘தேவேந்திர குல வேளாளர்‘ என மாற்றி அரசாணை பிறப்பிக்க வேண்டும்.பட்டியலினத்தவர் பிரிவிலிருந்து தேவேந்திர குல வேளாளர்களை நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் தமிழக அரசு மலையாள சமூக இரு சமூக மக்களை BC பட்டியிலில் சேர்க்க உத்தரவு இட்டிருந்தது.
இந்நிலையில் தொடர்ந்து போராடி வரும் தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் புறக்கணிப்பதாக கூறி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட முயன்றனர். உடனடியாக வந்த காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் தலைவர் மனுநீதி சோழன்,
தொடர்ந்து எங்களின் கோரிக்கை நிராகரிக்கபடுவதாகவும்,தேவேந்திர குல வேளாள மக்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என கேட்டு கொண்டார். கொரோனா பரவல் கோவையில் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.