• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாற்றுத்திறனாளிகள் – முதியோருக்கு உதவிட இலவச ‘சாரதி மினி வேன்’ திட்டம்: சுவர்கா பவுண்டேஷன் அறிமுகம்

February 10, 2023 தண்டோரா குழு

மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்கு உதவிடும் வகையில் ‘சாரதி மினி வேன்’ திட்டத்தை கோவையில் சுவர்கா பவுண்டேஷன் அறிமுகம் செய்தது. இதற்கான அறிமுகம் விழா கோவை, கணபதியில் உள்ள புரோசோன் மாலில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பதி, கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த வேனின் உள்ளே மூன்று சக்கர நாற்காலியை வைக்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளே இருந்து மூன்று சக்கர நாற்காலி உதவியுடன் வெளியே வருவதற்கும் இதில் சாய்வு தளம் போன்ற அமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமும் இல்லாமல் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். நடப்பதற்கு சிரமப்படும் அனைவரும் இந்த வேனை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவையை சுவர்கா பவுண்டேஷன் இலவசமாக வழங்குகிறது. இந்த வேன் தேவைப்படுவோர் 73977 00482 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான 4வது இந்திய காங்கிரஸ் மாநாட்டையும் சுவர்கா பவுண்டேஷன் கடந்த 8–ந்தேதி முதல் ஆனைகட்டியில் நடத்தி வருகிறது. இது நாளையுடன் (11–ந்தேதி) முடிவடைகிறது. இந்த மாநாட்டில் குழு விவாதங்கள், மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் சிறப்புரைகள், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் உல்லாச பயணங்கள் ஆகியவையும் இடம் பெற்றன. இதில் சுமார் 80க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் தம்மால் எதுவும் செய்ய இயலாது என்று நினைப்பவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களை வாழ்க்கையில் சாதிக்க தூண்டுவதாகும். அவர்களுக்கு இருக்கும் திறமையை அறிந்து அதை வெளிக்கொண்டு வருவதாகும். மேலும் நமது உரிமைகள் மற்றும் தேவைகளை வெளிப்படுத்தவும், அது குறித்து பேசவும், அதைப் பற்றி சமூகத்தில் தெரியப்படுத்துவதும் ஆகும்.

மேலும் இதில் மாற்றுத்திறனாளிகளின் இசை நிகழ்ச்சியும், கோவையைச் சேர்ந்த இளைஞர்களின் பேண்ட் சிக்மா என்னும் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அத்துடன் இந்த மாநாட்டில் ஓவியத் தெரு என்னும் பகுதியில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. இவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மேலும் படிக்க