• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மார்ச் 1 முதல் பெப்சி கோக் விற்பனை இல்லை – வணிகர் சங்கம்

January 24, 2017 தண்டோரா குழு

வெளிநாட்டு வகை குளிர்பானங்களான பெப்சி, கோக-கோலா ஆகியவை மார்ச் 1 தேதி முதல் கடைகளில் விற்கப்படமட்டாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும் என இளைஞர்கள் சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தியதுடன், விவசாயிகளின் தற்கொலை தடுக்கப்பட வேண்டும், வெளிநாட்டு வகை பெப்சி, கொக-கோலா ஆகிய குளிர்பானங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தீர்வு கிடைத்துள்ள நிலையில், பெப்சி, கொககோலா ஆகிய வெளிநாட்டு குளிர்பானங்கள் மார்ச் 1ம் தேதி முதல் விற்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.

போராட்டத்தில் கோரிக்கை விடுத்ததைப் போல் பெப்சி, கோக் ஆகிய பானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க இயலாது என்பதால், மார்ச் 1ம் தேதி முதல் அந்த வகை பானங்களை விற்பனை செய்ய மாட்டோம்” என்று வணிகர் அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும், இந்தத் தடை மூலம் இந்திய குளிர்பானங்களுக்கு லாபம் கிடைக்கும். இந்திய பணம் வெளிநாடுகள் செல்லாமல், நம் நாட்டிலேயே இருப்பதால் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க