• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநில பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு இன்ஜினியர் சந்திரசேகர் பரிசு வழங்கினார்

October 9, 2024 தண்டோரா குழு

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் மற்றும் அமிர்த வித்ய விஷ்வ பீடம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது.இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து
100 மேற்பட்ட பாரா நீச்சல் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்,பார்வையற்றோர், உயரம் குறைந்தவர்கள்,அறிவுசார் குறைபாடு உடையோர் போன்ற பிரிவுகளுடைய மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 50 மீட்டர் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல்
பேக் ஸ்டிரோக், பட்டர்பிளை ஸ்டிரோக்
ப்ரஸ்ட் ஸ்டிரோக் 150 மீட்டர் பிரீ ஸ்டைல்
மற்றும் 200 மீட்டர் தனிநபர் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டிகளின் முடிவில் 317 புள்ளியுடன் சென்னை அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றது. 118 புள்ளிகளுடன் சேலம் அணி இரண்டாம் இடத்தை பிடித்தது.இப்போட்டியில் தகுதி பெற்ற பாரா நீச்சல் வீராங்கனைகள் கோவாவில் நடைபெறும் தேசிய பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர் வீராங்கனைகளுக்கு டி ஷர்ட், தங்கு வசதி, உணவு,உள்ளூர் போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

வீரர் வீராங்கனைகளுக்கு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தேசிய துணை தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் பதக்கம் அணிவித்து கோப்பை வழங்கி சிறப்பித்தார்.
பொதுச் செயலாளர் கிருபாகராஜா, கோவை மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவர் ஷர்மிளா ராம் ஆனந்த் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்.
போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க