• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநாகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு

March 1, 2021 தண்டோரா குழு

போலி ஆவணங்கள் தயாரித்து கோடி ரூபாய் மதிப்புள்ள தமது இடத்தை அபகரிக்க உதவிய மாநாகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை மனு விடுத்துள்ளார்.

கோவை இடையர் வீதியைச் சேர்ந்தவர் லிங்கதேவி, கல்யாண சுந்தரலிங்கம் மற்றும் சந்திரா ஆகியோரின் மகளான இவருக்கு ,கருப்ப கவுண்டர் வீதியில் சுமார் கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக வளாக கடைகளை போலி ஆவணங்கள் தயாரித்தும்,தம் மீது காவல் துறையினர் பொய்யான வழக்கு பதிவதாகவும் கூறி,. கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

கடந்த 1986,2001,2002 ஆம் ஆண்டுகளில் எனது தந்தை மற்றும் அவருடைய சகோதரர்களும் இனைந்து கருப்பண்ண கவுண்டர் வீதியில் மூன்றே கால் சென்ட் இடத்தை வாங்கினர். இந்நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு செல்வமணி என்பவர் இந்த சொத்து தொடர்பான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் கூறி அடியாட்களுடன் புகுந்து தகராறு செய்து எங்களின் ஒரு வீட்டில் குடியேறினார் எனவும்
இந்நிலையில் எனது தந்தை செல்வமணி மீது கொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பொழுதே இந்த இடத்திற்கு உரிய வீட்டு வரி மற்றும் மின் இணைப்புகளை தனது பெயருக்கு செல்வமணி மாற்றினார்.எனவும், நாங்கள் மீண்டும் அதிகாரிகளிடம் ஆவணங்களுடன் புகார் அளித்ததின் பேரில் மீண்டும் எங்களது பெயருக்கு 2018 ஆம் ஆண்டு ஆவணங்கள் மாற்றப்பட்டது.

இந்நிலையில் போலியான ஒரு ஆவணங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு தனது பெயருக்குப் பட்டாவை மாற்றி, தனது மகன் ஆனந்தராஜ் என்பவருக்கு 2021 ஜனவரி மாதம் தான செட்டில் மெண்ட் என்ற பெயரில் மூன்று போலி பத்திரங்களை கொடுத்துள்ளார் இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மத்திய மண்டல பிரிவு அதிகாரிகள் மற்றும் நிலவரித் திட்ட அதிகாரிகளுடன் இணைந்து 1518 சதுர அடி இடத்தை பட்டா போட்டு ஆக்கிரமித்துள்ளனர்.

இதுகுறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஏற்கனவே பலமுறை புகார் அளித்துள்ளோம் அதே வணிக வளாகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தொழில் செய்து வரும் அனைவரையும் இரவோடு இரவாக அடித்து துரத்தி வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர். மேலும் நாங்கள் எந்த தவறும் செய்யாத சூழலில் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவர் மீதும் அடியாட்களுடன் புகுந்து தகராறு செய்ததாக பெரியகடைவீதி போலீஸ் ஸ்டேஷனில் பொய் புகார் அளித்து அதன்படி எங்கள் மீது வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள். எனவும் போலியான ஆவணத்தை வைத்துக்கொண்டு தங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தை ஆக்கிர மித்த செல்வமணி மற்றும் ஆனந்தராஜ் அவரது குடும்பத்தாருக்கு துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கோவையில் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரே துணை போவதாக பெண் ஒருவர் கூறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க