• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் 2153 வாக்குச்சாவடிகள்

November 10, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு 2153 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

கோவை மாநகராட்சிக்கு 1400 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி எனவும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு 1200 வாக்காளருக்கு ஒரு வாக்குச்சாவடி எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி பட்டியல்
தயார் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் மொத்தம் 1290 வாக்குச்சாவடிகளும், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகளில் 69 வாக்குச்சாவடிகளும், பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளில் 89 வாக்குச்சாவடிகளும், வால்பாறை நகராட்சியில் 21 வார்டுகளில் 73 வாக்குச்சாவடிகளும், 33 பேரூராட்சிகளில் 513 வார்டுகளில் 632 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் மாவட்டத்தில் 2153 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க