• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சியில் 9 உதவி செயற்பொறியாளர்கள் இடமாற்றம்

August 26, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 9 உதவி செயற்பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்த சரவணக்குமார், பிரதான அலுவலக பொறியியல் மற்றும் குடிநீர் பிரிவுக்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வந்த உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், மத்திய மண்டல உதவி செயற்பொறியாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய மண்டல உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, தெற்கு மண்டல உதவி செயற்பொறியாளராகவும், தெற்கு மண்டலத்தில் பணிபுரிந்து வந்த சுந்தர்ராஜ், கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளராகவும், மத்திய மண்டல உதவி செயற்பொறியாளர்( திட்டம்) ஹேமலதா, மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளராகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல்,வடக்கு மண்டல உதவி செயற்பொறியாளர்(திட்டம்) தெற்கு மண்டலத்திற்கும்,பிரதான அலுவலக பொறியியல் பிரிவு உதவி செயற்பொறியாளர் கலாவதி, மேற்கு மண்டலம் உதவி செயற்பொறியாளராகவும்( திட்டம்), கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் பாபு, மத்திய மண்டல உதவி செயற்பொறியாளராகவும்( திட்டம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் (பணிகள்) செந்தில் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்( திட்டம்) பணிகளை கூடுதலாக மேற்கொள்வார். உதவி செயற்பொறியாளர் கலாவதி, பில்லூர் 3 ஆவது திட்டம், நிலம் கையகப்படுத்தும் பணியினை கூடுதலாக கவனிப்பார்.உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், வெள்ளலூர் உரக்கிடங்கு திட்டப் பொறியாளர் பணியினை கூடுதலாக கவனிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க