• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாநகராட்சிக்கு எதிராக பேனர் வைத்த குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு !

September 7, 2020 தண்டோரா குழு

கோவை ஹாப்ஸ் காலேஜை சேர்ந்த ஒரு வீட்டில் கொரோனா இல்லாத 4பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்த மாநகராட்சியை கண்டித்து நேற்று பேனர் வைத்தனர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,இன்று கொரோனா குறித்து பேனர் வைத்த குடும்பத்தினர் மீது மாநகராட்சி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் போலிசார் நோய் பரப்புதல், அனுமதியின்றி பேனர் வைத்தல், அவதூறு செய்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், பெருமாள் கோயில் வீதி, ராமானுஜ நகரில் வசித்து வருபவர் இளவரசன். இளவரசனின்
மனைவிக்கு முதன்முதலாக 17.08.2020 அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கொடீசியாவில் அனுமதிக்கப்பட்டு 24.08.2020
அன்று வீடு திரும்பி உள்ளார். அவர்களின் குடும்ப நபர்களின்ஒத்துழைப்பு இல்லாததால் கொரோனா பரிசோதனைகள்
செய்யப்படவில்லை.எனவே அந்த வீடு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக
அறிவிக்கப்பட்டு 14 நாட்கள் வெளியில் செல்ல தடை செய்யப்பட்டது.

மேலும் கொரோனா அறிகுறி ஏதேனும் இருப்பின் மருத்துவ அலுவலரையோ அல்லது சுகாதார ஆய்வாளரையோ தொடர்பு கொள்ள
அறிவுறுத்தப்பட்டது.இளவரசனின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்தும், தனது தந்தையை யாருக்கும் தெரியாமல்
வேடப்பட்டியிலிருந்து 18.08.2020 அன்று தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 5 நாட்களுக்கு பிறகு அவரது தந்தைக்கு உடல் நிலை
பாதிக்கப்பட்டதால் 22.08.2020 அன்று இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பலனின்றி 25.08.2020
இறந்துள்ளார். அவர் இறந்ததால் 27.08.2020 மேற்கண்ட பகுதியில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் மருத்துவ
பரிசோதனை செய்யப்பட்டது.இந்த பரிசோதனை முடிவுகள் 01.09.2020 அன்று வெளிவந்தது. அதில் அவரது மனைவி ரோஜா, மகள்கள்
வித்யா, ஸ்ருதி மற்றும் அவரது தயார் வைரம்பாள் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மாநகராட்சி அலுவலர்களால் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து மேற்படியார் 04.09.2020 அன்று தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து,தொற்று இல்லை என்ற
அறிக்கையை பெற்று மாநகராட்சியைக் கண்டித்து பேனர் வைத்துள்ளார்.மேற்படியார் ஆரம்ப முதல் மாநகராட்சி பணியாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு தராமல், மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேனரும் வைத்துள்ளார்.

பொதுமக்களுக்கு நோய் பரப்பும் விதமாக செயல்பட்டதாலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து மாநகராட்சியின் முன் அனுமதி
பெறாமல், வெளியில் நோய் பரப்பும் விதமாக செயல்பட்டதாலும்,அவர் இந்திய சட்டத்தின்படி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்பதை மாநகராட்சியின் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.அரசுக்கும், மாநகராட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற தீய எண்ணத்துடனும், அரசின் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு எவ்வித ஒத்துழைப்புக்கொடுக்காமலும் செயல்பட்டுள்ளார். அவர் தவறான செய்தியினை பரப்பியது மிகவும் கண்டனத்துக்குரிய செயல் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.பொதுமக்கள் இது போன்ற தவறான செய்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க