• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசும், கையாலாகாத தமிழக அரசும் தான் காரணம்– ஸ்டாலின்

September 1, 2017 தண்டோரா குழு

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசும், கையாலாகாத தமிழக அரசும் தான் காரணம் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறும்போது,

மாணவி அனிதாவின் மரணத்திற்கு என்னுடைய இரங்கலை மிகுந்த வேதனையோடு பதிவு செய்கிறேன்.அவரது மரணத்திற்கு மத்திய அரசும், கையாலாகாத தமிழக அரசும் தான் காரணம். நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் இதுபோன்று சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க