September 21, 2017
தண்டோரா குழு
ஆசிரியர்கள் மாணவர்களை எங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகளை உருவாக்குங்கள் என துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,பேசும்போது,
ஆசிரியர்களாகிய நீங்கள் எப்படி திறமை படைத்தவர்களாக மற்றவர்களுக்கு போதிக்கின்ற ஆற்றல் பெற்றவர்களாக உங்கள் தகுதிகளை வளர்த்திருக்கிறார்களோ அதைபோன்று உங்கள் மாணவர்களையும் ஆசிரியர்களாக, மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக எங்களை போன்று நல்ல அரசியல் வாதிகளாக உருவாக்கி சமூகத்திற்கு சேவை ஆற்றிட வேண்டும் என்றார்.
மேலும், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஜெட் வேகத்தில் செயல்படுகிறார் என ஓபிஎஸ் கூறினார்.