• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாட்டிறைச்சி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்!

June 19, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேஷ் மாநிலத்தில் திருமண விருந்தில் மாட்டிறைச்சி இல்லை என்ற காரணத்தால் திருமணம் நின்றுப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேஷ் மாநிலத்தில் போட் காவல்துறை வரம்பிலுள்ள தரியா கார் கிராமத்தில் நடக்கவிருந்த திருமணத்தில் மாட்டிறைச்சி இருக்க வேண்டும் அல்லது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று மணமகனின் குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் நிபந்தனை விதித்தத்தோடு, வரதட்சணையாக கார் ஒன்றையும் கேட்டுள்ளனர். இந்த நிபந்தனையை ஏற்க மறுத்தால் திருமணம் நின்றுவிட்டது.

இதுகுறித்து மணப்பெண்ணின் தாயார் கூறுகையில்,

“திருமண விருந்தின்போது மாட்டிறைச்சி பரிமாற வேண்டும் என்றும், வரதட்சிணையாக கார் ஒன்று வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். அவர்களுடைய நிபந்தனையை மறுத்தால், திருமணத்தை நிறுத்திவிட்டனர். மாநில அரசு மாட்டிறைச்சிக்கு தடைவித்துள்ளது. நாங்கள் அதை எப்படி வாங்கி விருந்தில் பரிமாறுவது? என்று கூறினார்.

உத்தர பிரதேஷ் மாநில அரசு மாட்டிறைச்சிக்கு தடை கொண்டு வந்தது. அதன் முதல், திருமண விருந்தில் மாட்டிறைச்சி பரிமாறவில்லை என்ற காரணத்தால், பல திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. பலருடைய வாழ்கையும் கேள்வி குறியாகிவிட்டது.

இதே போல், கடந்த ஏப்ரல் மாதத்தில் நடக்க விருந்த திருமணமும் மாட்டிறைச்சி பரிமாற வில்லை என்பதால் மற்றொரு மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க