• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாட்டின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொள்வதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் ஆர்ப்பாட்டம்

August 19, 2017 தண்டோரா குழு

மாட்டின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொள்வதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியாவில் மாட்டின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொள்வதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் “கொன்றது ஆர்.எஸ்.எஸ் நான் சாட்சி” என்ற முழக்கத்தை முன்வைத்தும், கொடூர கொலைகளுக்கு எதிரான இந்தியா என்ற தலைப்பில் தேசம் தழுவிய பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் வைத்து இந்தியாவில் மாட்டின் பெயரால் நடைபெறும் கொலைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்று சாட்சி பகரும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

கேம்பஸ் ஃப்ரண்ட்டின் கோவை மாவட்ட தலைவர் K. பீர் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் மாநில பொது செயலாளர் L.அப்துல் ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட் – ன் மாநில பொருளாளர் N.M.ஷாஜஹான்,நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்M.ஆயிஷா சித்திகா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது மாட்டின் பெயரால் நடைபெறும் அனைத்து கொலைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என கோசங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து தடை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க