• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மஹிந்திராவின் புதிய சுப்ரோ சிறிய ரக சரக்கு வாகனம் அறிமுகம் !

July 9, 2021 தண்டோரா குழு

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் தனது புதிய வகை சிறிய ரக சரக்கு வாகனமான சுப்ரோ டிரக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெற்றிகரமான சுப்ரோ வகைப் பிரிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய சரக்கு போக்குவரத்து வாகனங்கள் குறைந்த செலவு, அதிக சக்தி, அதிக சரக்கு சுமக்கும் திறன் மற்றும் அதிக மைலேஜ் ஆகியவற்றைக் கொண்டதாக விளங்குகிறது. இதனால் இது வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபத்தை உறுதி செய்கிறது.

இது குறித்து எம் அண்ட் எம் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமொடிவ் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி வீஜய் நக்ரா கூறுகையில்,

சுப்ரோ வகை வாகனங்கள், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விருப்பமான சிறிய வணிக வாகனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதன் செயல்திறன் மற்றும் பொறியியல் திறன்களைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் இவற்றை அதிகம் விரும்புகின்றனர். புதிய சுப்ரோ ப்ராஃபிட் டிரக் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் லாபத்தை மையமாகக் கொண்டு எங்கள் உற்பத்தி செயல் திறனை கணிசமாக மேம்படுத்துகிறோம்.

இப்பிரிவில் மற்ற வாகனங்களுடன் ஒப்பிடுகையில் சரியான விலையில் இருக்கும் அதே சமயம் இந்த புதிய வகை டிரக்குகள், இந்தப் பிரிவில் முன்னணி செயல்திறன், எரிபொருள் சிக்கன செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் டீசல் மற்றும் சிஎன்ஜி பவர் ட்ரெயின் தேர்வு விருப்பத்தையும் வழங்குகிறது. இந்த துறையை சிறந்த வகையில் மாற்றி அமைக்கும் வாகனமாக இது திகழும் என்பதோடு மட்டுமல்லாமல், எங்கள் வாடிக்கையாளர்கள் வளம் அடையவும் அவர்கள் வாழ்க்கையில் உயரவும் இந்த வகை வாகனங்கள் துணையாக அமைந்து அவர்களுக்கு உதவும் என நான் உறுதியாக நம்புகிறேன். என்றார்.

சுப்ரோ ப்ராஃபிட் டிரக் மிகவும் கவர்ச்சிகரமான கடன் நிதி வாய்ப்புகளுடன் வருகிறது. வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகள் கடன் காலத்துடனும் குறைந்த உள் வருவாய் விகிதம் 12.99 சதவீதம் முதலும் வாகனத்தைப் பெறலாம், இது வாடிக்கையாளர்களுக்கு ஈஎம்ஐ எனப்படும் கடன் தவணையைக் குறைக்க உதவுகிறது. சுப்ரோ ப்ராஃபிட் டிரக்கில் வாடிக்கையாளர் 100 சதவீதம் வரை கடன் பெறலாம்.

சக்திவாய்ந்த ஏசி மற்றும் மொபைல் சார்ஜிங் பாயிண்ட்டுடன் வருகிறது. மேலும் 3 ஆண்டுகள் அல்லது 80,000 கிலோ மீட்டர் என்ற உத்தரவாதத்துடன் இந்த பிரிவிலயே முதல் முறையாக இத்தகைய உத்தரவாத தன்மையுடன் கிடைக்கிறது.

சூப்பர் ப்ராஃபிட் டிரக் மினி, மஹிந்திராவின் சக்திவாய்ந்த டைரக்ட் இன்ஜெக்ஷன் டீசல் பிஎஸ்-6 இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 19.4 கிலோவாட் சக்தியுடன் வருகிறது, மேலும் சிறந்த பிக் அப் மற்றும் முடுக்கத்தை வழங்குகிறது. இது நான்கு-ஸ்ட்ரோக், 2-சிலிண்டர் 909 சிசி டிஸ்பிளேஸ்மெண்ட் இயந்திரத்தைக் கொண்டுள்ளது. இது 26 ஹெச்பி 55 என்எம் முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது, இது 4-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ்டன் பொருத்தப்பட்டுள்ளது. இது பவர் மற்றும் எக்கோ பயன்முறையில் இரண்டு விருப்பத் தேர்வுகளுடன் எரிபொருள் ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது லிட்டருக்கு 23.30 கிலோமீட்டர் வழங்குகிறது. இந்தப் பிரிவில்யே இது தான் முன்னணி மைலேஜ் வழங்கும் வாகனமாகத் திகழ்கிறது.

13 இன்ச் டயர் பயன்படுத்ப்பட்டுள்ளது. இந்த டயருடன் இணைக்கப்பட்ட நிலையில் ட்ரக்கின் அடிப்பாகத்திற்கும் தரைக்கும் இடையிலான உயரம் 170 மில்லி மீட்டராக உள்ளது. எனவே முழு சுமையுடன் உள்ளபோதும் கூட அதிக செயல்திறன் மற்றும் அதிக வேகத்தை வழங்குகிறது.

இது சக்திவாய்ந்த 20.01 கிலோவாட் இன்ஜிசினுடன் வருகிறது, இது 60 என்எம் முறுக்கு விசை மற்றும் 23.35 கிலோ மீட்டர் சிறந்த மைலேஜ் ஆகியவற்றை வழங்குகிறது. இது குந்தப் பிரிவில் முன்னணியில் திகழும் வகையில் 750 கிலோ சுமை தூக்கும் திறன் பேலோட் மற்றும் 3 ஆண்டுகள் அல்லது 80,000 கிலோ மீட்டர் வரையில் உத்தரவாதத்தை வழங்குகிறது.

புதிய டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளதால், இது கார் போன்ற கியர் ஷிப்ட்-டை வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு பளுவை குறைப்பதால் வாடிக்கையாளர்கள் நீண்ட பயணங்களை களைப்பின்றிச் செய்து அதிக லாபம் ஈட்டலாம்.

முன்புறம் மோதல்கள் ஏற்பட்டால் சேதத்தை குறைக்க வலுவான 220 மில்லி மீட்டர் முன் மூக்கு வடிவ வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மிகக் கடினமான மற்றும் உறுதியான கட்டமைப்பையும் கொண்டு மிக உயர்ந்த பாதுகாப்பை வழங்குகிறது. புதிய சூப்பர் ப்ராஃபிட்ரக் மேக்ஸி 1050 கிலோ அதிக பேலோட், பெரிய ஆர் 14 டயர்கள், 196 மில்லி மீட்டர் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் அனைத்தும் புதிய டிரான்ஸ்மிஷன்களுடன் வருகிறது.

மஹிந்திராவின் சக்திவாய்ந்த டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ டீசல் பிஎஸ்-6 எஞ்சின் மூலம் சுப்ரோ ப்ராஃபிட் டிரக் மேக்ஸி இயக்கப்படுகிறது.இது 35.4 கிலோவாட் சக்தி, 47 ஹெச்பி மற்றும் 100 என்எம் டார்க் ஆகியவற்றை வழங்குகிறது. அதன் செயல்திறன் மிக அதிக அளவில் இருக்கும் அதே சமயத்தில், சுப்ரோ ப்ராஃபிட் டிரக் மேக்ஸி லிட்டருக்கு 21.94 கிலோ மீட்டர் என அதிக மைலேஜ் வழங்குகிறது. இந்த அடக்கமான சரக்கு வாகனம் 8.2 அடி சரக்கு பெட்டியில் 1050 கிலோ பேலோட் சுமக்கும் திறனை வழங்குகிறது. இதன் மூலம் சுப்ரோ ப்ராஃபிட் டிரக் மேக்ஸி, குறைந்த செயல்பாட்டு செலவில் அதிக பேலோடுகளை சுமக்கிறது. அதே நேரத்தில் டர்ன் அரவுண்ட் நேர விகிதத்தை மேம்படுத்துவதுடன் அதன் மூலம் உரிமையாளர்களின் வருவாயையும் அதிகரிக்க உதவுகிறது.

சுப்ரோ ப்ராஃபிட் டிரக் மேக்ஸி ஒரு டெக் பாடி சரக்குப் பெட்டக தேர்வுடன் வசதியான டே கேபினுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஏர் கண்டிஷனிங் மற்றும் பவர் ஸ்டீயரிங் போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது, இவற்றின் வாயிலாக அதன் போட்டி நிறுவனங்களின் வாகனங்களைக் காட்டிலும் மிகவும் வசதியான மற்றும் எளிதில் இயக்கக்கூடிய வாகனமாக இந்த சுப்ரோ வகை வாகனம் அமைகிறது. புதிய வகை டிரான்ஸ்மிஷனுடன் உள்ள இது கார் போன்ற கியர் ஷிப்ட் வசதியை வழங்குகிறது. ஓட்டுநருக்கு சோர்வைக் குறைத்து வாடிக்கையாளர்கள் நீண்ட பயணங்களை மேற்கொள்ள இது உதவுதன் மூலம் அவர்கள் அதிக லாபம் ஈட்ட முடியும்.

சிறந்த பிரேக்கிங்கிற்காக சுப்ரோ ப்ராஃபிட் டிரக் மேக்ஸி வகை வாகனங்கள் டூயல் எல்எஸ்பிவி-யுடன் எக்ஸ் ஸ்பிளிட் பிரேக்குகளுடன் வருகிறது. இஎல்ஆர் சீட் பெல்ட்கள் மற்றும் 220 மில்லி மீட்டர் ஃப்ரண்டல் நோஸ் வடிவமைப்பு பாதுகாப்பானதாக அமைவதுடன் எந்த நிலப்பரப்பிலும் எளிதில் பயணம் மேற்கொள்ள உதவுகிறது.

தற்போது, சுப்ரோ பிராண்ட் இந்தியாவில் பரந்த அளவில் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களை 8 வகைகளில் வழங்குகிறது. இன்ஜின் விருப்பங்கள், பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு ஏற்ப எரிபொருள் திறன் தேர்வுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக இவை அமைந்துள்ளன. சுப்ரோ ரக வாகனங்கள் சக்திவாய்ந்த மற்றும் திறமையான டிஐ டீசல் இன்ஜின்களின் விருப்பத் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

சரக்கு வாகனப் பிரிவில், உரிமையாளர்களின் லாபத்தை அதிகரிப்பதற்காக பல தயாரிப்புகளை சுப்ரோ வழங்குகிறது. இதனால் தான் இதற்கு லாப டிரக்குகள் என்ற பெயர் வந்தது. சுப்ரோவின் இந்த வகையான ப்ராஃபிட் டிரக்குகள் குறைந்த பராமரிப்பு செலவில் சிறந்த மைலேஜ் மற்றும் சிறந்த பேலோட் திறனை வழங்குகின்றன. சுப்ரோ சரக்கு வாகன வகைகள் 7.5 அடி மற்றும் 8.2 அடி மற்றும் கேபின்-பாடி-சேசிஸ் வடிவத்திலான டெக் நீளத்துடன் கிடைக்கின்றன.

பயணிகள் போக்குவரத்திற்கு, சுப்ரோ பல்வேறு வகையில் இந்தியாவில் பரந்த அளவிலான வேன்களை வழங்குகிறது. அரை-கடின மேல்புற மற்றும் கடின மேல்புற வகைகளில் 10 இருக்கைகள் கொண்ட விருப்பத் தேர்வுகளில் சுப்ரோ வேன்கள் கிடைக்கின்றன. இவை அதன் உரிமையாளர்களுக்கு இந்தப் பிரிவிலேயே முன்னணி மைலேஜுடன் சிறந்த இட வசதி, சொகுசு மற்றும் பாதுகாப்பை வழங்குகின்றன. சுப்ரோவின் பல்துறை வேன்கள் குடும்ப பயன்பாடு, ஒப்பந்த வாகனப் பயன்பாடு, மேடை வாகனப் பயன்பாடு, பள்ளி மற்றும் ஊழியர்களின் போக்குவரத்துப் பயன்பாட்டுத் தேவைகள் ஆகியவற்றை பூர்த்தி செய்கின்றன. சுப்ரோ வேன் பிரிவில் மஹிந்திரா மிகவும் குறைந்த செலவில், கூடுதல் கட்டமைப்பு வாகனங்கள், வகை பி டீசல் ஆம்புலன்ஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

மேலும் படிக்க