October 31, 2017
தண்டோராகுழு
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், சென்னை நகரில் பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913 என்ற உதவி எண்ணில் மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் தெரிவிக்கலாம்.
அதைப்போல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-27237107, 044-27237207; வாட்ஸ்அப் – 9445071077, 9445051077 என்ற உதவி எண்ணில் மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் தெரிவிக்கலாம்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1077, 044-27664177, 044-2766646; என்ற உதவி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.