September 10, 2025
தண்டோரா குழு
சமபங்கு, கடன், தங்கம், வெள்ளி போன்ற பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்யும் ஒரு திறந்த-நிலை திட்டமான குரோ மல்டிஅசெட் அலோகேஷன் ஃபண்ட்இன் தொடக்கத்தை குரோ மியூச்சுவல் ஃபண்ட்அ றிவித்துள்ளது.
இந்த புதிய நிதி வழங்கல் செப்டம்பர் 10, 2025 முதல் செப்டம்பர் 24, 2025 வரை திறக்கப்பட்டிருக்கும். முதலீட்டு தொகுப்பின் ஏற்ற இறக்கங்களை குறைக்கவும் மற்றும் மாறும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப பொருத்தமானதாகவும் இருக்கும் வகையில் பல்வேறு சொத்து வகைகளை இணைக்கும் ஒரு பல்வகைப்படுத்தப்பட்ட ஒதுக்கீட்டு கட்டமைப்பை முதலீட்டாளர்களுக்கு வழங்க இந்த திட்டம் நோக்கம் கொண்டுள்ளது.
பன்முக சொத்து முதலீட்டின் அடிப்படையானது, வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு சொத்து வகைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் அமைந்துள்ளது. பங்குகள் பொதுவாக பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவன வருவாய் விரிவாக்கத்தின் கட்டங்களில் பயனடைகின்றன. கடன் பத்திரங்கள் மீதான வருவாய், வட்டி விகித போக்குகள் மற்றும் பணவீக்க சுழற்சிகளால் பாதிக்கப்படுகின்றன. மறுபுறம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை பெரும்பாலும் நிச்சயமற்ற நிலை, உலகளாவிய அபாய நிகழ்வுகள் அல்லது நாணய மாறுபாடுகளுக்கு எதிர்வினையாற்றுகின்றன.
இந்த இயக்கிகள் ஒன்றுக்கொன்று முழுமையாக தொடர்புடையவை அல்லாததால், எந்த ஒரு ஒற்றை சொத்து வகுப்பும் அனைத்து காலக்கட்டங்களிலும் ஒரு முன்னணியில் இருக்காது. தலைமைத்துவம் சுழன்று கொண்டே இருக்கும் என்று தரவு காட்டுகிறது – சில ஆண்டுகளில் பங்குகள் சிறப்பாக செயல்படலாம், சில ஆண்டுகளில் கடன் சிறப்பாக செயல்படலாம், இன்னும் சில ஆண்டுகளில் பொருட்கள் சிறப்பாக செயல்படலாம்.
அவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முதலீட்டுத்தொகுப்பு சந்தையின் அனைத்து நிலைகளிலிருந்தும் பயன் பெறுவதற்கு சிறந்த வழி முறையாக அமையலாம். குரோ மியூச்சுவல் ஃபண்டின் தனியுரிமை சொந்த தளமான ஷாஸ்ட்ரா ஸ்ட்ராடெஜிக் ஹோலிஸ்டிக் அசெட் அலோகேஷன் அண்ட் சிஸ்டமேடிக் டெக்னிக்கல்ரிஸ்க் அசெஸ்மென்ட் என்ற முதன்மை தளத்தால் குரோ மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்ட் இயக்கப்படுகிறது.
இந்த நுண்ணறிவின் அடிப்படையில் குரோ மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்ட் கட்டமைக்கப்பட்டுள்ளது மேலும் அதன் முதலீட்டு செயல்முறையின் மையத்தில் ஒதுக்கீட்டை வைக்கிறது. சொத்து ஒதுக்கீட்டை வழிநடத்துவதற்கு மேக்ரோ, தொழில்நுட்ப மற்றும் சந்தை தரவுகளை ஷாஸ்ட்ரா ஆய்வு செய்கிறது. இந்த சமிக்ஞைகள், பக்கசார் பைக் குறைக்க, அபாயங்களை முன்கூட்டியே அடையாளம்காண, மற்றும் முதலீட்டு தொகுப்பின் மேலாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, நிதி மேலாளருக்கு தகவலறிந்த முடிவுகளை எடுப்பதில் உதவுகின்றன.
இந்த ஃபண்ட், பெரிய பொருளாதார போக்குகள் மற்றும் முதலீட்டாளர்களின் மனநிலை இரண்டையும் கருத்தில் கொண்டு ஒரு சொத்து ஒதுக்கீட்டு கட்டமைப்பை பின்பற்றுகிறது.