• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மலாலா யூசுப்பின் புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை

October 19, 2017 தண்டோரா குழு

லண்டனில் மலாலா யூசுப்சாப் ஜீன்ஸ் மற்றும் கால்களில் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு சென்ற புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

பாகிஸ்தான் தலிபான் ஆட்சியின் கீழ் இருந்தபோது, பல கடுமையான சட்டங்கள் இருந்தன. அதில் பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என்ற சட்டமும் அடங்கும். அப்படிபட்ட சூழ்நிலையில், மலாலா யூசுப்சாய் தைரியமாக பள்ளிக்கு சென்றார். பெண் கல்விக்காக துணிச்சலாக போராடினார். இந்நிலையில் கடந்த 2௦12ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி, பெண் கல்விக்காக போராடிகொண்டிருந்த மலாலாவை தலிபான் அமைப்பினர் அவருடைய தலையில் சுட்டானர். இதையடுத்து பாகிஸ்தான் சிகிச்சை பெற்று வந்த அவர் பிறகு, லண்டன் நகரின் ராணி எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.

அதன்பின் பெண் கல்வி, சமத்துவம் ஆகியவற்றுக்காக தொடர்ந்து போராடி வருகிறார் மலாலா. இதற்காக கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுமம் அவருக்கு வழங்கப்பட்டது.தற்போது 20 வயது நிரம்பிய மலாலா யூசுப்சாப், லண்டன் நகரிலுள்ள பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதரம் ஆகிய பாடங்களை பயின்று வருகிறார்.

இந்நிலையில், மலாலா யூசுப்சாப், ஜீன்ஸ், மற்றும் காலில் ஹை ஹீல்ஸ் அணிந்து கொண்டு பல்கலைக்கழகத்திற்கு செல்வது போன்ற புகைப்படம் ஒன்று, சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளியானது மலாலா யூசுப்பின் புகைப்படம் தான், என்று உறுதிப்படுத்தப்படவில்லை.எனினும், மலாலாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. அவர் ஒரு வெளிநாட்டு ஏஜெண்ட் என்றும், பாகிஸ்தானியர்கள் அவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.

இருப்பினும், மலாலாவிற்கு ஆதரவாக நுற்றுக்கணக்கான நெட்டிசன்கள், மலாலா தான் விரும்பிய உடையை அணிவதற்கான உரிமை உள்ளது என்று ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க