• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மறைந்த முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

January 29, 2019 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 88. கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் 1998-2004 வரை ராணுவ அமைச்சராக பதவி வகித்தார். விபி சிங் பிரதமராக இருந்த போது பெர்னாண்டஸ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். இவர் ராணுவ அமைச்சராக இருந்தபோதுதான் கார்கில் போர் நடந்தது. கார்கில் போரை சிறப்பாக கையாண்டதால் பலரது பாராட்டுகளை பெற்றார். மேலும் இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போதுதான் இந்தியா பொக்ரான் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

இதற்கிடையில், சமீபகாலமாக நோய் வாய்ப்பட்டிருந்த அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது. இந்நிலையில், இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, இவரது மறைவிற்க்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி இல்லத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்க