• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மறுமணம் செய்ய மறுத்த பெண் மீது ஆசிட் விசி தற்கொலை செய்த தொழிலாளி

January 18, 2019 தண்டோரா குழு

கன்னியாகுமரியில் மறுமணம் செய்ய மறுத்த விதவை பெண் மீது ஆசிட் வீசிவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஏற்றக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிரிஜா (35). 8வருடங்களுக்கு முன் கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு பெண் குழந்தைகளுடன் தனியாக இவர் வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் கொத்தனார் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான் ரோஸ் 28 வயதான இவர் விதவை பெண் கிரிஜாவிடம் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் ஒருவருடத்திற்ககு முன்பு ஜான் ரோஸ் மீது கிரிஜா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வரும் நிலையில் திருமணம் செய்ய மறுத்த கிரிஜா மீது ஆசிட் -ஐ வீசியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிரிஜா தற்போது அரசு நாகர் கோவில் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே தற்கொலைக்கு முயன்ற ஜான் ரோஸ் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஜான் ரோஸ் பரிதாபமாக உயிரிழந்தார். மறுமணம் செய்ய மறுத்த விதவைபெண் மீது ஆசிட் வீசிவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க