November 7, 2017
தண்டோரா குழு
நடிகர் கமல்ஹாசன் தனது 63வது பிறந்தநாளை முன்னிட்டு ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் திருவள்ளுவர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை கமல் திறந்து வைத்தார்.
இந்தவிழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன்,
தேங்கிய மழைநீரை அரசு அகற்றி வருவதால், நாங்கள் மருத்துவ முகாமை நடத்துகிறோம். மழைநேரங்களில் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முடிந்தவரை மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக மருத்துவமுகாமை தொடங்கி வைப்பதாக கூறினார்.
மேலும், மருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. எங்களுடைய பணிகள் அமைதியாக நடந்து கொண்டிக்கிறது. எங்களுடைய முயற்சிகள் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மழை நேரங்களில் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். புதியவர்களும், பழையவர்களும் பாராட்டுகிறார்கள் என்றால் நம் உழைப்புதான் காரணம். நலத்திட்டப்பணிகளுக்காக அரசியலை பயன்படுத்திக் கொள்வதாகவும் கமல்ஹாசன் கூறினார்.