• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மருதமலை கோவில் அடிவாரத்தில் நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

July 16, 2020 தண்டோரா குழு

கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பேசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பிரசித்தி பெற்ற மருதமலை கோவில் அடிவாரத்தில் நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘கருப்பர் கூட்டம்’என்ற யு டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை,ஆபாசமாக சித்தரித்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து பல்வேறு இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரசித்தி பெற்ற மருதமலை திருக்கோவில் அடிவாரத்தில் கடைகளை வைத்திருக்கும் வியாபாரிகள் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்திரித்தவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்து முன்னனியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா பேசுகையில்,அருவருக்கத்தக்க வகையிலும்,ஹிந்துக்களின் மனம் புண்படும் படியாகவும்,பதிவை வெளியிட்டுள்ளவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக மருதமலை அடிவாரத்தில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க