• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மரமாகும் பேனா மாற்றுத்தினாளியின் புது முயற்சி !

December 11, 2018 -ச.ச.சிவசங்கர்

நவீன காலத்தில் நாம் இழந்திருக்கும் செல்வங்களில் சுற்றுச்சூழல் பிரதனமானது. நம் அன்றாட தேவைகளில் கூட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அரசாங்கம் தடை செய்திருப்பினும் சுற்றுச்சூழல் மாசுபட்டிருப்பது நிதர்சனம். பிளாஸ்டிக்கு மாற்றாக காகித பைகள் புழகத்தில் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இதில் பேனாவில் சிறு வித்தியாசமாக முயற்சி ஒன்று நடந்து வருகிறது, பேனா பள்ளி பருவத்திலிருந்தே நம்முடன் பயணிக்கிறது. இன்றுவரை பத்திரிக்கையாளர்களின் அடையாளமாக இருந்து வருகிறது.

அப்படியான அடையாளத்தை செழுமைப்படுத்துகிறார் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டதைச் சேர்ந்து பிரமோத் (33). மாற்றுதிறனாளியான பிரமோத் தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற மன உறுதி காகிதம் மூலம் பேனா தயாரிப்புக்கு இழுத்துச் சென்றுள்ளது. இதில் விஷேசம் என்னவென்றால் சுற்றுச்சூழல் மீது கொண்டுள்ள அக்கறையினால் பேனாவில் விதைகளை வைத்துள்ளார். இப்போது பெரும்பாலும் ரீஃபிள் பேனா தான் அதிக புழக்கத்தில் உள்ளது. இதை ஒரு முறை உபயோகித்து விட்டு தூக்கி எறிந்துவிடுகிறார்கள். இந்த புள்ளியை தான் பிரமோத் பயன்படுத்துகிறார். பேனாவில் விதை வைப்பதால் தூக்கி எறிந்தாலும் அங்கு ஒரு மரம் முளைக்கும் என்பது அவரது நம்பிக்கை.

இது குறித்து பிரமோத்திடம் கேட்டபோது,

”இந்த வேலையை சுமார் எட்டு மாதமாக செய்து வருகிறேன். இதற்கு முன் எங்கள் ஊரில் ஒருவர் தயாரித்துக் கொண்டிருந்தார். அவர் இதை கற்றுக் கொடுத்தார். இதற்குள் நான் விதை வைத்து தயாரித்தேன். இது ஓரளவுக்கு பரவலாகி இருக்கிறது. பலரும் கேட்கிறார்கள். எழுதி முடித்த பின் அந்த விதையை விதைத்தவர்கள் சிலர் அழைத்தார்கள் அது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.

மேலும் படிக்க