• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மம்மி, டேடி வேண்டாம் அம்மா போதும் மாணவர்களுக்கு வெங்கய்யா நாயுடு வேண்டுகோள்

March 14, 2019 தண்டோரா குழு

மம்மி, டேடி என்பதை விட அம்மா என்றழையுங்கள் என மாணவர்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை நீலாம்பூர் அருகிலுள்ள தனியார் (பி.எஸ்.ஜி.) தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும், லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் அனைத்து பரிமாற்றும் இணையத்தளமாக்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ,
2 லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களில் இணையத்தளம் சேவை வழங்கப்பட்டுள்ளது. தொழிலில் நெறிமுறைகள் குறைந்து வருகிறது.
மாணவர்கள் வாழ்வில் நெறிமுறைகள் கொண்டிருக்க வேண்டும்.
தாயை மறத்தல் கூடாது, நான் அரசியலில் இருந்த அம்மாவை சொல்லவில்லை, அந்த அம்மா கூட நல்லவர் தான்.

தாய் என்பது தந்தையும் உள்ளடக்கியது தான் என்பதை பெண்ணின் ஆங்கில வாரத்தையில் ஆணும் இருப்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். பிறந்த ஊர், தாய்மொழியை மறக்க கூடாது. , மம்மி, டேடி என்பதை விட அம்மா என்றழையுங்கள் என மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஒவ்வொருவரும் தாய்மொழியை பெருமையாக நினைக்க வேண்டும். அதனாலே பாராளுமன்றத்தில் அவரவர் தாய்மொழியில் பேசுவதை கொண்டு வந்ததாக கூறியவர், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளை சாதிப்பதற்காக , இன்றைய சூழலில் கற்க வேண்டும் கட்டாயத்தில் இருப்பதாகவும், இருப்பினும் சாதி, மதம், இனம் வேற்றுமையின்றி நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். யோகா மோடிக்காக அல்ல நம் உடலுக்காக என்றும், நாம் மெகானிக் வாழ்க்கைக்கு மாறி வருவதாகவும், துரித உணவு என்பது உடனடி நோய் என்று அர்த்தம் என அதற்கு எடுத்துக்காட்டாக கூறியவர், நமக்கான பாரம்பரிய உணவை உண்ண வேண்டும் என்றும், எந்த நாட்டில் இல்லாத வகையில் சுவையான, ஆரோக்கியமான உணவை இந்தியா கொண்டுள்ளதாகவும் குறிப்பாக தென்னிந்திய உணவு மிகவும் சிறப்பானது என்றார்.

எந்த நாட்டிற்கு சென்றாலும் இந்தியாவின் நன்மதிப்பும், மரியாதையும் உயர்ந்துள்ளதை பார்க்க முடிவதாகவும், தற்போது சர்வதேச அளவில் நிலைமை மாறியுள்ளதாக கூறியவர், 3வது பெரிய பொருளாதார நாடாக இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா உருவாகும் என ஆய்வுகள் கூறுவதாக குறிப்பிட்டார். மாணவர்கள் எந்தவித பேதமுமின்றி அனைவரையும் சமமாக மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சுரண்டல், ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருந்தாலும் இந்தியா அதன் மதிப்பிலிருந்து விலகாமல், இதுவரை எந்த நாட்டையும் தாக்கியதில்லை என்று பெருமை அடைந்தவர்,
மாணவர்கள் தங்களின் திறமைகளை அவ்வப்போது மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கிராமங்களிலேயே தங்கியிருந்து கிராமப்புறங்களை அறியும் வகையில் கல்வியில் ஒரு பகுதியாக கட்டாயப்படுத்துவதன் மூலம் உண்மையான இந்தியாவை நாம் புரிந்துக் கொள்ள முடியும் என்றார்.

புதிய தொழில் உருவாக்குவதில் இந்தியா சர்வதேச அளவில் 2வது இடத்தில் உள்ளதாகவும், ஒற்றுமை, நேர்மையாக நமக்காக (மக்களுக்காக) நம் இராணுவ வீரர்கள் போராடுவதை சமீப காலத்தில் நாம் பார்த்திருப்பதாக பாக்கிஸ்தான் பகுதியிலிருந்த தீவிரவாத முகாமை இந்தியா அழித்ததை சுட்டிக்காட்டியவர், பாக்கிஸ்தான் தீவிரவாதத்திற்கு ஆதரவும், நிதியும் வழங்கி வருவதை எதிர்த்து போராடி வரும் நம் வீரர்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார். பகிர்வு, அக்கறை இந்தியாவின் தத்துவம் என்றும், தாய், தந்தையை மட்டுமின்றி சமுதாயத்தையும் பெண்கள் பார்த்துக்கொள்வதாகவும், ஒரு ஆணுக்கு கல்வி என்பது அவருக்கு மட்டுமே கல்வி, ஆனால் ஒரு பெண்ணுக்கு கல்வி கொடுப்பது ஒரு குடும்பத்திற்கு கல்வி கொடுப்பதற்கு சமம் என்றவர், பொருளாதாரம் மட்டுமே வாழ்க்கை கிடையாது என்றும் இசை, நடனம், யோகா போன்ற பலவகைகள் கொண்டதே வாழ்வு என்றும், பணம் மட்டுமே என்பது வாழ்க்கையை வெறுக்கத்தக்கதாக மாற்றிவிடும் என்றும் எச்சரித்தார். கல்வி நிறுவனங்களுக்கு செல்வது, புனித யாத்திரை செல்வதாக உள்ளதாகவும், சம்பாதிப்பதை விட கற்பது மிக முக்கியம் என்றவர், பருவமழை மாற்றம், பொருளாதார நிலைத்தன்மை, செயற்கை நுண்ணறிவு, சுதந்திர அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியிம் கல்வியறிவு இல்லாமல் இருப்பது என பல பிரச்னைகளுக்கு இடையே வாழ்ந்து வருவதையும் சுட்டிக்காட்டினார். கல்வியை கொடுப்பது, அனைத்து செல்வத்தை கொடுப்பதற்கு சமம் என்றவர், முன்னதாக தனது உரையை
தமிழும், தமிழர்களும் தன் மனதிற்கு நெருக்கமானவர்கள் என்றும், அழகான நகரமான கோவையில் மாணவர்களான உங்கள் மத்தியில் உரையாடுவது மகிழ்ச்சி என்றார்.

மேலும் படிக்க