• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மன அழுத்தங்களை தவிர்க்கவே ரேங்க் நடைமுறை ரத்து – தமிழக அரசு விளக்கம்

May 12, 2017 தண்டோரா குழு

மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களையும் ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலையும் தவிர்க்கும் வகையில் ரேங்க் நடைமுறை கைவிடப்படுவதாக தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“மாணவர்களுக்கிடையேயான போட்டி இன்றைய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியாக மாறியுள்ளதால் மாணவர்களும் பெற்றோரும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

முதல் தரவரிசை மாணவர்களே கவனிக்கப்படும் நிலையில், கடைநிலை மற்றும்‌ மத்திய நிலை மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கும், புறக்கணிப்பிற்கும் ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

போட்டி மயமான கற்றல் சூழ்நிலையில் தாக்குப்பிடிக்க முடியாத பல மாணவர்கள் மன இறுக்கத்திற்கும் சோர்வுகளுக்கும் உள்ளாகிறார்கள். தெரிதல், அறிதல், புரிதல், பயன்படுத்துதல், வினவுதல், திறனடைதல் என்ற பல்வேறு நிலைகளில் நடைபெறும் ஓர் அழகிய செயல்பாடாக கற்றல் இருக்கிற வேளையில், அதில் எழுத்துப்பூர்வமான தேர்வின் மதிப்பெண்கள் அதீத முக்கியத்துவம் பெற்று ஒரு சில மாணாக்கர்களே போற்றப்படும் நிலை தவிர்க்கப்பட வேண்டிய அவசி‌யம் உள்ளதாக அரசு கருதுகிறது.

ஆகையால், மாணவர்களுக்கு ஏற்படும் அதீத மன அழுத்தங்களை , ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலைத் தவிர்க்கும் வகையில் பொதுத்தேர்வு ரேங்க் முறையை கைவிடப்படுகிறது.”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க