• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மன்னிப்பு கேட்டார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்

March 22, 2018 தண்டோரா குழு

பேஸ்புக்கில் முக்கிய பிரமுகர்களின் தனி நபர் தகவல்கள் திருடப்படுவதை ஒப்புக்கொண்டார் நிறுவனர் மார்க்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது,கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், ஃபேஸ்புக்கில் இருந்து 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களை திருடி, டொனால்டு டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற உதவியதாக செய்திகள் வந்தது.இதனையடுத்து கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் தலைமை அலுவலர் (சி.இ.ஓ)அலெக்சாண்டர் நிக்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல் திருடப்பட்டிருப்பது உண்மை தான்.பயனர்களின் தகவல்களை பாதுகாக்கும் கடமை பேஸ்புக் நிறுவனத்திற்கு உண்டு.இருப்பினும், தகவல்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.மேலும்,தகவல்களை பாதுகாக்கும் கடமையை செய்ய முடியாவிடில் மக்களுக்கு சேவையாற்றும் தகுதி எங்களுக்கு இல்லை என்று கூறினார்.

மேலும் படிக்க