• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மனிதநேயத்திற்கு எடுத்துக்காட்டான மனிதர்.

May 5, 2016

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. லத்தூர் மாவட்டத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, ரயில்மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த வறட்சியை அரசியலாக சிலர் முயன்று வருகின்றனர்.

ஆனால், லத்தூரில் வசிக்கும் மத்தீன் பாய் என்னும் மனிதாபிமானம் நிறைந்த மனிதர் மக்களுக்குத் தேவையான தண்ணீரை இலவசமாக வழங்கி வருகிறார்.

இவர் வறட்சி தலை விரித்து ஆடும் சூழ்நிலையில் தன்னுடைய ஆழ்துளைக் கிணற்றை மூடிவைக்காமல், தன்னைச் சுற்றி இருக்கிறவர்களுக்கு தன் கிணற்றில் இருந்து சுமார் 10,000 லிட்டர் தண்ணீரை கடந்த மூன்று மாதங்களாகக் கொடுத்து வருகிறார்.

பேஸ்புக் இணைய தளத்தில் உள்ள வாய்ஸ் ஒப் ராம் என்னும் பகுதி மூலம் இவருடைய தன்னலமற்ற சேவையைக் குறித்த தகவல்கள் வெளியே கொண்டு வரப்பட்டது.

மேலும், மத்தீன் என்பது ஒருவருடைய பெயர் அல்ல, மாறாக ஒரு செயலின் பெயர் ஆகும்.

மனிதக் குலத்திற்கு சேவையைக் கற்றுக் கொடுக்க முடியும் என்றால், அது மத்தின் பாய் ஒருவரால் மட்டுமே முடியும் என்று அவர் அருகில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தண்ணீருக்கான விலையைப் பெற்று கொள்ளுங்கள் என்று கூறினால் கட்டாயமாக மறுத்து விடுகிறார். உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மத்தின் பாய் கூறுகிறார் என்று ஒரு பெண்மணி தெரிவித்தார்.

இதுகுறித்து மத்தின் பாயிடம் கேட்ட போது, ஒரு வேலை இந்தக் கிணற்றில் உள்ள தண்ணீர் அவர்களிடம் தான் போய் சேர வேண்டும் என்று நிர்ணயித்து இருந்தால் அவர்களுக்குச் சொந்தமானது எதுவோ அதை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்று கூறினார்.

உங்களுக்கு இதே நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது, நானும் அவர்களைப் போல் குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் எங்கு கிடைக்குமோ அங்கே செல்வேன் என்று அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.

மத்தீன் போன்ற மனிதர்கள் தான் தொண்டு மனப்பான்மை வீட்டில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். மனித நேயத்தை எந்த ஒரு இனமும் மதமும் சதம் கொண்டாட முடியாது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மேலும் படிக்க