• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார்

September 7, 2017 தண்டோரா குழு

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட நிர்மலா சீதாராமன் அதிகார பூர்வமாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக கடந்த 3ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது.
இதில் வர்த்தகத்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனிடம், பாதுகாப்புத்துறை ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார்.

தற்போது நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராகியுள்ளார் நிர்மலா சீதாராமன். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகியுள்ள முதல் தமிழ் பெண்மணி நிர்மலா சீதாராமன்.மேலும் இந்திரா காந்தி பிரதமர் பதவியுடன் பாதுகாப்பு துறையையும் வைத்திருந்தார். ஆனால் முதல் முறையாக பாதுகாப்புத் துறை ஏற்றுள்ள பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க