• Download mobile app
08 Apr 2026, WednesdayEdition - 3710
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு தங்களது பெயரில் செயல்படுத்தி வருகிறது – வானதி சீனிவாசன்

March 15, 2023 தண்டோரா குழு

கோவை ராமநாதபுரம் பகுதியில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை சார்பில் சமூகம் அறியாமல் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சமூகம் அறியாமல் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக இது போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் வடமாநில தொழிலாளர்களின் மீது தாக்குதல் நடத்துவது யாராக இருந்தாலும் சட்டத்தின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் சாதி மத ரீதியிலான பாகுபாடு எங்கும் இருக்கக் கூடாது எனவும் நேரடியாக பாதிக்கப்பட்ட வட மாநில தொழிலாளர்களை தான் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்த அவர், நாட்டில் உள்ள எந்த மக்களும் வேறுபாட்டின் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடாது என கேட்டுக்கொண்டார்.மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை வாய்ப்பு வரும்போதெல்லாம் குறைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் பாதிப்பு பெரியதாக இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் மத்திய அரசு மானியம் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அனைத்து மத்திய அரசு திட்டங்களும் செயல்படுத்தப்படுவதாகவும் ஆனால் மத்திய மத்திய அரசின் திட்டங்கள் தான் என்று பெயர் வெளியே வராத வகையில் தமிழக அரசு அதனை தடுக்கும் வேலையை செய்து கொண்டிருப்பதாகவும் வானதி சீனிவாசன் விமர்சித்தார்.

மேலும் படிக்க