• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் புதிய வரைவுக் கல்வி கொள்கையை கண்டித்து SFI ஆர்ப்பாட்டம்

June 25, 2019 தண்டோரா குழு

மத்திய அரசின் புதிய வரைவுக் கல்வி கொள்கையை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பாக கோவை அரசு கலை கல்லூரி முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் வரைவுக் கல்வி கொள்கையை எரிக்க முயன்ற மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

மும்மொழி கொள்கை, கல்லூரியில் சேர நுழைவு தேர்வு உள்ளிட்ட திருத்தங்களுடன் புதிய வரைவுக் கல்வி கொள்கையை மத்திய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று மத்திய அரசின் இக்கொள்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கம் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கம் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு புதிய வரைவுக் கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க முயல்வதாகவும், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

கல்வியில் முன்னோடியாக இருக்கும் தமிழகம், மத்திய அரசின் இந்த புதிய கல்வி கொள்கையால் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முயற்சியை கண்டித்து , வரைவுக் கல்வி கொள்கை நகலை மாணவர்கள் எரிக்க முற்பட்டனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க