• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுரை காமராஜர் மற்றும் சென்னை பல்கலை கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமனம்

May 27, 2017 தண்டோரா குழு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரையும், சென்னை பல்கலைகழக துணைவேந்தராக துரைசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“சென்னை அண்ணாப் பல்கலைகழக துணைவேந்தர் 3 அல்லது 4 மாதத்திற்குள் தேர்வு செய்யப்படுவார். அண்ணா பல்கலைகழகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்ட 3 பேரை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நிராகரித்து விட்டார்.

பட்டங்களில் துணைவேந்தர் கையெழுத்து போடவிட்டாலும் மாணவர்களுக்கு பாதிப்பு கிடையாது. விரைவில் தமிழகத்தில் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
துணைவேந்தர் நியமனத்திற்கும், காலதாமதத்திற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளது. இனி வரும் காலங்களில் துணைவேந்தர் பதவிக்கான கல்வி தகுதி, ஆகியவை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

துணைவேந்தர் பதவி காலியாகும் 6 மாதத்திற்கு முன் தேர்வு பணி துவங்கும்.இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நியமனத்திற்கான நபர்கள் பட்டியலை முன்கூட்டியே தயாரித்து பரிந்துரையை வழங்கும். இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரப்படும்.”

இவ்வாறு அன்பழகன் கூறினார்.

மேலும் படிக்க