• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மதுபானக் கடையை மூட வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம்

November 11, 2019

24 மணி நேரமும் படு ஜோராக கள்ளத்தனமாக விற்று வரும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்ததால் கோவை அருகே உள்ள மாதம்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கே மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது, அந்த கடையை மூட கோரி கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வந்துள்ளன. மதுக்கடை நேரத்தையும் தாண்டி 24 மணி நேரமும் இக்கடையில் மது கிடைப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெரியவர்கள் இளைஞர்கள் முழுநேரமும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் இதனைத் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வரும் இந்த போக்கை கண்டித்து இதுகுறித்து பலமுறை மாவட்ட அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்களால் தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாது மது விற்பனை கள்ளத்தனமாக படு ஜோராக நடந்து வருகிறது. எனவே இது போன்ற ஒரு சூழல் நீடித்தால் சமூகத்திற்கு பெரிய பிரச்சினையாக முடியும் என்பதனை அடிப்படையாக வைத்து மாதம்பட்டி இளைஞர்கள் ஒன்றிணைந்து மதுக் கடையை நிரந்தரமாக மூடும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உறுதுணையாக பெண்களும் பெரியவர்களும் களம் இறங்கியதால் கோவை அருகே உள்ள மாதம் பட்டியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் படிக்க