September 2, 2020
தண்டோரா குழு
மதுக்கரை வனச்சரகம் விநாயகர் கோவில் வீதி அருகே கடந்த சில வாரங்களுக்கு முன் வந்த சிறுத்தை ஒன்று அங்கு பட்டியில் இருந்த ஆட்டு குட்டிகளை அடித்துக் கொன்றது.இதையடுத்து வனத்துறை அங்கு கூண்டு வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். ஆனால் நீண்ட நாள் ஆகியும் மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் மீண்டும் அங்கு தென்படாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தர்மலிங்கேஸ்வரர் கோவில் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து மதுக்கரை வனத்துறையினர் ரோந்து சென்ற போது அங்கு சிறுத்தை நாயை அடித்து கொன்றது தெரியவந்தது. இதனால் சிறுத்தையை பிடிக்க தர்மலிங்கேஸ்வரர் கோவில் அருகே ஒரு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு மற்றும் பகல் நேரத்தில் கூண்டீல் நாயை வைத்து சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மதுக்கரை வனப்பகுதியில் உள்ள மலையில் இரண்டு சிறுத்தை நடமாடும் விடியோ ஒன்று உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் வைரல் ஆகி வருகிறது.