• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுக்கரை அருகே சிறுத்தை தாக்கி பட்டி ஆடுகள் பலி

July 1, 2020 தண்டோரா குழு

கோவை மதுக்கரை வனப்பகுதி அருகே மெய்தீன் என்பவரது பட்டிக்குள் புகுந்த சிறுத்தை 4 ஆடுகளை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

கோவை மதுக்கரை குவாரி ஆபிஸ் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சஹிலா மொய்தீன். இவர் வீட்டில் பட்டி அமைத்து 6 ஆடுகள் வளர்த்தி வந்தார். கடந்த வாரம் பட்டியில் இருந்த ஒரு ஆடு மாயமானதாக தெரிகிறது. மர்ம நபர்கள் திருடிச்சென்றிருக்கலாம் என நினைத்து உரிமையாளர் சஹிலா பட்டியை நன்றாக அடைத்து வைத்திந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் பட்டிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று உள்ளே ஆடுகளை கடித்து இழுத்துச்செல்ல முயன்றுள்ளது. ஆனால் சத்தம் கேட்டு உரிமையாளர் வெளியே வந்ததால் ஆடுகளை அங்கேயே விட்டுவிட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடியுள்ளது. இதையடுத்து பட்டிக்குள் பார்த்த போது இரண்டு ஆடுகள் இறந்த நிலையில் இரண்டு ஆடுகள் கழுத்தி படுகாயங்களுடனும் கிடந்ததுள்ளது.

இதையடுத்து காயமடைந்த ஆடுகளுக்கு அருகே இருந்த கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை கால் தடங்களை உறுதி செய்தனர். மேலும் அங்கு தானியங்கி கண்காணிப்பு கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய உள்ளனர்.

மேலும் படிக்க