• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதுக்கடையை திறக்காதே – கொரனாவை அழைக்காதே கோவையில் எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்

May 7, 2020 தண்டோரா குழு

மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்பு சின்னம் அணிந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு போதிய நிதியை வழங்கிட வேண்டும். வேலையின்றி, வருவாயின்றி வீட்டில் முடங்கிக்கிடக்கும் உழைப்பாளி மக்களின் குறைந்தபட்ச இருப்பைக்கூட பறிப்பதற்கு மதுக்கடைகளை திறந்துவைத்த மாநில அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் மாநிலம் முழுவதும் கருப்பு சின்னம் அணிந்து கண்டன போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்ஒருபகுதியாக கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் முன்பு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கருப்பு சின்னம் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி,மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க