• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மண்டல அலுவலகங்களில் உள்ள கொரோனா கட்டுபாட்டு அறைகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

May 16, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மண்டல
அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறைகளில் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சி.எம்.சி. காலனி,
வெரைட்டி ஹால் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர், அங்குள்ள பொதுமக்களிடம் அனைவரும் தவறாது கொரோனா மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.பின்னர், மேற்கு மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும்பணிகளை மாநகராட்சி கமிஷனர் பார்வையிட்டார்.

அதே போல் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட கோவைப்புதூரில்அமைக்கப்பட்டுள்ள கொரோனா மருத்துவ முகாம் மற்றும் தெற்கு, வடக்கு மண்டல அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாட்டு அறையினை
பார்வையிட்ட பின்னர், அங்குள்ள பொதுமக்களிடம் அனைவரும் தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும், முகக்கவசம் கட்டாயம்
வேண்டும், சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி கமிஷனர் தமிழ்ச்செல்வன்,மத்திய மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், தெற்கு மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க