• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

March 20, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் வெளியிட்டார்.

நாடு முழுவதும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் தமிழகம் புதுச்சேரி என 4௦0 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அதிமுக, திமுக இரு பெரும் கூட்டணியில் இல்லாத பிறகட்சிகள் தனித்து போட்டியிடும் என்றும், சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றனர். மேலும் பல்வேறு சிறிய கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை துவங்கியுள்ளனர்.
இவ்வேளையில் பெரிதும் எதிர்பர்க்கப்படுகிற நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 21 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அப்பட்டியலில் :

வட சென்னை – ஏ.ஜி.மவுரியா
மத்திய சென்னை – நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர்
திருவள்ளூர் – எம்.லோகரங்கன்
அரக்கோணம் – என்.ராஜேந்திரன்
வேலூர் – ஆர்.சுரேஷ்
கிருஷ்ணகிரி – எஸ்.ஸ்ரீகாருண்யா
தருமபுரி – வழக்கறிஞர் வி.ராஜசேகர்
விழுப்புரம் – வழக்கறிஞர் அன்பில் பொய்யாமொழி
சேலம் – ரகுமணிகண்டன்
நீலகிரி – வழக்கறிஞர் ராஜேந்திரன்
திண்டுக்கல் – டாக்டர் எஸ்.சுதாகர்
நாகப்பட்டினம் – குருவைய்யா
தூத்துக்குடி – பொன் குமரன்
புதுச்சேரி – எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன்

மேலும் வரும் மார்ச் 24ஆம் தேதி கோவையில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க