• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மக்களுடன் எத்தனை பிரச்சினைகளில் களத்தில் இருந்திருக்கிறார் ட்விட்டர் அரசியல்வாதி – வானதி சீனிவாசன் கேள்வி

April 1, 2021 தண்டோரா குழு

மக்களுடன் எத்தனை பிரச்சினைகளில் களத்தில் இருந்திருக்கிறார் ட்விட்டர் அரசியல்வாதி என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை காந்திபுரம் பா.ஜ.க தேர்தல் பணிமனையில் அக்கட்சியின் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

திரைத்துறையில் ரஜினிகாந்த் அவர்களின் சாதனையை முன்னிட்டு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்திற்கு அறிவித்திருக்கிறது. அந்த விருது பொருத்தமான நபருக்கு கொடுக்கபட்டுள்ளதை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். திருக்குறளை உதாரணம் காட்டிய கமல்ஹாசனுக்கு என்னை பற்றி கருத்து கூறும் போது ஏன் அது அவருக்கு நினைவிற்கு வரவில்லை.

அரசியலில் வெற்றியோ தோல்வியோ மக்கள் கொடுப்பதை ஏற்றுக்கொண்டு சேவை செய்வதுதான் அரசியல். அந்தப் பக்குவம் இன்னும் கமலஹாசன் அவர்களுக்கு வரவில்லை. கமல்ஹாசன் அரசியலில் நீண்ட பயிற்சி எடுக்க வேண்டும்.தமிழக மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக திமுக செயல்படுகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பாஜக என்ற போலி பிரசாரத்தின் மூலம் தமிழக மக்கள் மனதில் பதற்றத்தை ஏற்படுத்த திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முயற்சிக்கின்றன என்று குற்றம் சாட்டினார். ட்விட்டர் அரசியல்வாதி இதுவரை எத்தனை மக்கள் பிரச்சனைகளில் களத்தில் இருந்திருக்கிறார் என்று கமல்ஹாசன் குறித்து வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். அனைத்து தரப்பு மக்களுக்கான அரசாக பா.ஜ.க இருந்து வருகிறது.

பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுவது அந்த சமூகத்தினராலேயே மறுக்கப்பட்டுள்ளது.சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண்களே அதை உணர்ந்து பாஜக விற்கு ஆதரவாக இருக்கின்றனர்.பெண்களை பற்றி தொடர்ந்து இழிவாக பேசிவரும் திமுக தனது கட்சியினரை கண்டிப்பதில்லை. பெண்களை மதித்து அவர்களுக்கான உரிமையை காக்கும் கட்சியாக பாஜக இன்றும் இருந்திருக்கிறது.கோவை மாவட்டத்தில் உள்ள பல பிரச்சனைகளை தீர்க நான் பாடுபட்டுள்ளேன். அரசியலில் வென்றாலும் தோற்றாலும் நான் மக்களுடன் களத்தில் என்றும் இருப்பேன்.என் மீது போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து சமூக வலைதளங்களில் காணொளி வெளியிட்டவர்கள் மீது புகார் அளித்துள்ளேன்.அதற்கான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

மேலும் படிக்க