• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களவை தேர்தல் கூட்டணி ஓரிரு நாளில் இறுதியாகும் – ஓபிஎஸ்

February 15, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தல் கூட்டணி ஓரிரு நாளில் இறுதியாகும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

துணைமுதல்வர் ஓபிஎஸ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

மக்களவை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் கூட்டணி இறுதி செய்யப்படும். மக்களவை தேர்தலில் போட்டியிட சுமார் 2000 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுவை அளித்துள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் விரைவில் துவங்கும். காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக மக்களின் நலனுக்காக மக்கள்நல திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மக்கள் எங்கள் பக்கம் தான். எனவே, நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெரும். பாஜக -அதிமுக கூட்டணி அமையுமா? என்பது குறித்து பத்திரிகையாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விரைவில் கூட்டணி குறித்து ஒரு நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க