• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘மகாராஜ் எக்ஸ்பிரஸ்’ ரயிலின் பயண கட்டணம் 7,35௦ டாலர் (4.9 லட்சம்) !

May 27, 2017 தண்டோரா குழு

ஐ.ஆர்.சி.டிசி நிறுவனம் இயக்கும் ‘மகாராஜ் எக்ஸ்பிரஸ்’ வரும் ஜூலை மாதம் முதல் புதிய சுற்றுலா சேவையை தொடங்குகிறது. இதற்கான பயன கட்டணம் 7,35௦ டாலர் (4.9 லட்சம்) ஆகும்

இந்திய ரயில்வேயின் பொது துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.டிசி ‘மகாராஜா எக்ஸ்பிரஸ்’ என்னும் சொகுசு ரயிலை, வட இந்தியாவை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட உள்ளது.

தற்போது தென் இந்தியாவிலுள்ள முக்கிய சுற்றுலா தளங்களை சுற்றிபார்க்க வசதியாக ‘தென்னகத்து அணிகலன்’ என்னும் சிறப்பு ரயிலை இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையிலிருந்து புறப்படும் மகாராஜா எக்ஸ்பிரஸ் கோவா, ஹம்பி, மைசூர், கொச்சி மற்றும் கும்பகோணம் வழியாக திருவனந்தபுரம் வந்து சேரும். தென்னகத்து அணிகலன் எக்ஸ்பிரஸ் மும்பையிலிருந்து ஜூன் 24-ம் தேதி புறப்பட்டு செட்டிநாடு, தஞ்சாவூர், மகாபலிபுரம், மைசூர், ஹம்பி மற்றும் கோவா வழியாக ஜூலை 1 ம் தேதி திருவனந்தபுரம் வந்து சேரும். இந்த பயணம் 8 நாள் மற்றும் 7 இரவு கொண்டது. வழக்கமான ரயில் சேவை வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும்.

இதற்கான கட்டணம் 7,35௦ டாலர் (4.9 லட்சம்) ஆகும். தங்கும் வசதி, உணவு, காபி, தேநீர், சுற்றுலா கட்டணம், போர்ட்டர் கட்டணம் ஆகியவை இதில் அடங்கும். அதோடு, கொச்சியில் நடக்கும் கலை நிகழ்ச்சி, அல்லேப்பேயிலுள்ள நதியில் கப்பல் பயணம், செட்டிநாடு உணவை சுவைக்கவும், கோவாவிலுள்ள கடல் கேளிக்கை ஆகியவற்றில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பும் உண்டு.

மேலும் படிக்க