• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகாத்மா காந்தி படித்த பள்ளி அருங்காட்சியமாகிறது

May 6, 2017 தண்டோரா குழு

குஜராத்தில் மகாத்மா காந்தி படித்த அல்பிரேட் உயர் நிலை பள்ளி அருங்காட்சியமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக அந்த பள்ளி வெள்ளிக்கிழமை(மே 5) மூடப்பட்டது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்காட் நகரில் அல்பிரேட் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி 1853-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி தொடங்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கில பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பள்ளியில் மகாத்மா காந்தி 188௦-1887-ம் ஆண்டு வரை கல்வி பயின்றுள்ளார். அவர் தனது 18 வது வயதில் பட்டம் பெற்றார். அவர் நினைவாக 1971-ம் ஆண்டு அந்த பள்ளிக்கு ‘மோகன்தாஸ் காந்தி’ மேல்நிலை பள்ளி என்று பெயர் மாற்றப்பட்டது.

அவர் படித்த அந்த பள்ளியை அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனை அடுத்து அந்த பள்ளியை அருங்காட்சியகமாக மாற்ற அப்பள்ளி மூடவேண்டும் என்று ராஜ்காட் மாநகர கார்பொரேசன் கடந்த ஆண்டு மனு ஒன்றை குஜராத் அரசிடம் வழங்கியது. அந்த மனுவை குஜராத் மாநில அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, அந்த பள்ளியை மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“இந்த பள்ளியை ஒரு அருங்காட்சியகமாக மாற்ற நிபுணர்களை நியமித்துள்ளோம். இந்த பணிக்கான செலவு சுமார் 1௦ கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் போன்ற தலைவர்களின் வாழ்க்கையை எடுத்துச்சொல்லும் இடமாக இது அமையும்” என்று இது குறித்து ராஜ்காட் மாநகர கார்பொரேசன தலைவர் பி.என்.பணி கூறியுள்ளார்.

“இந்த கல்வியாண்டிலிருந்து மாணவர்கள் தாங்கள் விரும்பும் பள்ளியில் சேர்ந்துக்கொள்ள, அவர்களுக்கு பள்ளி மாற்று சான்றிதழ் வழங்கி வருகிறோம்” என்று மாவட்ட கல்வி அதிகாரி, ரேவ் படேல் கூறியுள்ளார்.

மேலும் படிக்க