• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை !

June 8, 2021 தண்டோரா குழு

பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தென்னாப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆஷிஷ் லதா ராம்கோபின். இவர் மீது ரூ.60 லட்சம் பண மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பான வழக்கு 2015-ஆம் ஆண்டு முதல் டர்பன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க