• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மகனின் திருமணத்தை 18 ஆயிரம் ரூபாய் செலவில் நடத்தும் ஆந்திர ஐ.ஏ.எஸ். அதிகாரி

February 8, 2019 தண்டோரா குழு

ஆந்திர மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவா் தனது மகனின் திருமணத்திற்காக ரூ.18 ஆயிரம் மட்டுமே செலவு செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் திருமணங்கள் திருவிழாவாகவே நடைபெற்று வருகின்றன. வசதி வாய்ப்புகள் குறைந்து இருந்தாலும் சிலர் கடன்களை பெற்று தங்கள் திருமணத்தை ஆடம்பர முறையில் செய்து முடிக்கின்றனா். இதனை காலத்தின் கட்டாயம் என்று அவா்களே தங்களுக்கு ஆறுதலும் கூறிக்கொள்கின்றனா்.ஆனால் இதற்கு மாற்றாக ஆங்காங்கே எளிமையான முறையில் தினம், தினம் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் பிரபலங்களோ பிரமுகா்களோ யாரும் தங்கள் குடும்ப திருமணங்களை இவ்வாறு நடத்துவது இல்லை.

இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தைச் சோ்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான பட்னாலா பசந்த் குமார் தனது மகனின் திருமணத்தை மிகவும் எளிய முறையில் நடத்த முடிவு செய்துள்ளார். இவரது மகனுக்கு வருகின்ற 10ம் தேதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில் இந்த திருமணத்திற்கு பட்னாலா பசந்த் குமார் ரூ.18 ஆயிரம் மட்டுமே செலவு செய்துள்ளார். இதில் திருமணத்தில் பங்கேற்கும் விருந்தினா்களுக்கான சாப்பாடு செலவும் அடங்கும் முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு பசந்த் தனது மகளின் திருமணத்தை ரூ.16 ஆயிரத்து 100 மட்டுமே செலவு செய்து நடத்தினர்.

இந்நிலையில் தற்போது அதே பாணியில் மகனின் திருமணத்தையும் நடத்த அவா் திட்டமிட்டு உள்ளார் .

மேலும் படிக்க