• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ப்ளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கம் !

April 17, 2019 தண்டோரா குழு

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமான டிக்டாக் செயலியை கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் அதன் தாக்கம் சற்று அதிகமாக இருந்து வருகிறது.இதற்கிடையில், டிக்டாக்’ செயலியில் கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வீடியோக்கள் வருவதால் அதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று எஸ். முத்துக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடைவிதிக்க வேண்டும் எனவும், அதில் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிக்-டாக் செயலியை உருவாக்கிய நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல், “டிக்-டாக் செயலியை 2 வகையாக கண்காணித்து வருகிறோம். இனிமேல் தவறான நோக்கத்துடன் வீடியோக்கள் பதிவு செய்யப்படமாட்டாது என தெரிவித்தார்.மேலும், நீதிமன்ற உத்தரவுக்கு பின்பு, பல லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன. நீதிமன்றம் தடை விதித்து இருப்பதால், தற்போது டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. எனவே அந்த தடையை விலக்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

இதையடுத்து, டிக்டாக் செயலி மீதான நடவடிக்கை குறித்து மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் தடை நீக்க மறுத்துவிட்டனர்இதனைத்தொடர்ந்து ஆப்பிள், கூகுள் நிறுவனத்திற்கும் நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியது.இந்நிலையில், இந்தியாவில் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும் டிக் டாக் செயலி நீக்கப்பட்டுள்ளது. .

மேலும் படிக்க